Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

பக்தியின் ஒழுக்கம் பாரீர்! பக்தர்களின் உடல்களை வெட்டி கொள்ளையடித்த கொடுமை.

சாமியார்களே வெள்ளத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பக்தர்களின் பணமும், நகையும்  பலியான பக்தர்களின் உடல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்த கொடுமை!
  உயிருக்குப் போராடும் யாத்ரீகர்களிடமிருந்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்தவர்கள் ‘பாபா'க்கள் என்று வணங்கப்படுகிற சாமியார்களே என்று திடுக்கிடும் தகவல்கள்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட இமயமலை சுனாமி என வர்ணிக்கப்படும் பெருவெள்ளத்தில் சிக்கி அம்மாநிலமே உருக்குலைந்து போனது. இதில் குறிப்பாக ஆன்மீக தலமான கேதர்நாத் நகரமே முற்றிலும் நிர்மூலமானது. தற்போது அங்கி எஞ்சி இருப்பது கற்களால் கட்டப்பட்ட கோயில்மட்டும்தான்..

இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இத்தகைய படுபாதக கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாபாக்கள் என்று யாத்ரீகர்கள் இறைவனுக்கு சமமாக வணங்கக் கூடிய சாமியார்கள் என்பதை மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்படி சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சாமியார்களிடம் இருந்து சுமார் சேறும் சகதியுமாக நனைந்து போய் இருந்த ரூ1.25 கோடி பணம் கைப்பற்றபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கேதார்நாத்தில் இருந்த ஒரே ஒரு வங்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பணப்பெட்டிகளும் வெள்ளம் வாரிச் சுருட்டியது. கேதார்நாத் கோயிலின் உண்டியலும் பொக்கிஷங்களும் கூட வெள்ளத்தால் திறந்துவிடப்பட்டன.

இந்நிலையில் மீட்புப் பணிக்காக வரிசையில் காத்திருந்த பல சாமியார்களிடம் புது நோட்டுகளும் இதுவரை பயன்படுத்தாத நோட்டுகளும் ஏராளமாக இருந்தன. அவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் பல ரூபாய் நோட்டுகள் கேதார்நாத் வங்கிக்குரியது என தெரியவந்தது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர்.

இதேபோல் ஒரு பாபாபா தன்னுடைய டோலக் எனப்படும் டிரம்மில் ரூ62 ஆயிரம் பணத்தை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். மற்றொருவர் பிரசாத பாக்கெட்டில் ரூ10ஆயிரத்தை பதுக்கி வைத்திருந்தாராம்.. மற்றொரு சாமியார் தம்முடைய துணிகளுக்கு இடையே ரூ1.2 லட்சத்தை பதுக்கி இருந்திருக்கிறார். இன்னும் சில சாமியார்கள் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான நகைகளையும் வளையல்களையும் அணிந்து நடமாடியுள்ளனர்.

 பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை அனைத்துமே யாத்ரீகர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையே என ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதில் உச்சகட்ட கொடூரம் என்னவெனில் சில சாமியார்கள் யாத்ரீகர்களின் விரல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்திருக்கின்றனர் என்பதுதான்! இவர்களை எப்படி வணங்குவது?

Read more at: http://tamil.oneindia.com/news/2013/06/24/india-religious-men-held-with-rs-1-cr-stolen-money-177722.html

பக்தியின் ஒழுக்கம் பாரீர்

வெள்ளத்தால் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பக்தர்களின் பணமும், நகையும் கொள்ளையோ, கொள்ளை!

பலியான பக்தர்களின் உடல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்த கொடுமை!

புதுடில்லி, ஜூன் 26- கேதார்நாத் வெள்ளக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பக்தர்களிடமிருந்து உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடலில் இருந்து உறுப்புகளை வெட்டி நகைகள் களவாடப்பட்டுள்ளன; பக்தியின் ஒழுக்கம் இதுதான்!

கேதார்நாத் மழைவெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர் களிடம் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டுள்ளன.

வரலாறு காணாத மழைவெள்ளத்தினால், உத்தர காண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர்.

சாமியார்கள் கொள்ளை!

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் உயிரிழந்தவர்களிடமும், உயிருக்குப் போராடிய பக்தர்களிடமும் சாமியார்கள் சிலர் கொள்ளையடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்தப் பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் கூறியதால் மீட்புப் படையினருக் குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டபோது, அந்தப் பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மீட்பு!

உடனடியாக அந்தக் கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப் பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக் கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாதப் பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப் படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விரல்களை வெட்டி நகைகளை எடுத்துள்ளனர்

குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலி யான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உண்டியல் உடைப்பு!

கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டி யல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

http://www.viduthalai.in/headline/62915-2013-06-26-08-47-52.html

No comments:

Post a Comment