Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

குறள் தீண்டத் தகாததாம்! குறளும் - கீதையும்!


‘திருக்குறளை எதிர்த்த தமிழ் மன்னர்கள் - உடைத்த பெரியார்’
 *************
 குறள் தீண்டத் தகாததாம்!
1796 இல் சென்னைக்கு அரசுத் துறைக்குப் பணியாற்ற வந்த எல்லீஸ்துரை  தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம்வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தார் என்தற்கு அவர்கள், அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியரின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் கேட்க, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.

எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம்பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணிச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ்துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

-------------(குறளும் அயோத்தி தாசரும் என்ற தலையங்கத் தில் செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 2000)

http://thamizhoviya.blogspot.com/2011/01/blog-post_25.html

குறளும் - கீதையும்!

திருக்குறளில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லை. ஆனால், பகவத் கீதையில் ஜாதி அமைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பகவத் கீதையைவிட உயர்ந்தது திருக்குறள்.

பொதுவாக திருக்குறளை எந்தப் பார்ப்பனரும் ஏற்றுக்கொள்வதில்லை.
பார்ப்பனர்கள் இவ்வாறு திருக்குறள்மீது வெறுப்புக் கொள்வதற்கே காரணம், அது பிறவிப் பேதத்தை எதிர்ப்பதுதான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான்.

பார்ப்பனர்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள், சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள் இழிந்தவர்கள் என்ற இந்து மதக் கூற்றுக்கு மனுதர்மம் வேதங்களின் புளுகுக்கு கீதையின் சரக்குக்கு திருக்குறள் மரண அடி கொடுக்கிறது என்கிறபோது குறளை எப்படி ஏற்பார்கள் பார்ப்பனர்கள்?

நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது. (கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 13).

ஜாதி தருமம் என்பது தன்னால் உண்டாக்கப்பட்டது என்றும், ஜாதியை உற்பத்தி செய்த பகவான் கிருஷ்ணனாலேயே அதனை மாற்றியமைக்க முடியாது என்றும் கூறும் கீதை எங்கே?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள் 972)

பிறப்பு என்பது எல்லா மக்களைப் பொறுத்தும் ஒன்றுதான்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது என்று கூறும் திருக்குறள் எங்கே?

வருண தன்மையில் பிராமணன், சூத்திரன் என்ற பேதத்தைக் கற்பிப்பதோடு கீதை நின்றுவிடவில்லை; ஆண் பிள்ளைகளையும் ஈன்று புறந்தரும் பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கேவலப்படுத்துகிறது.

அதனால்தான் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கீதை என்பது ஒரு முட்டாளின் உளறல் என்று முகத்தில் அடித்ததுபோல விமர்சித்தார்.

எந்த வகையில் பார்த்தாலும் குறள், குன்றின்மேல் விளக்குப் போன்ற உயர்ந்த சீலத்தை உடையதாகும். கீதையோ கீழ்மைத்தன்மை கொண்டதாகும்.

- "விடுதலை"தலையங்கம் 12-8-2009

கீதையிலே கண்ணன் சொல்லியபடி என்று ஏதாவது இரண்டு வார்த்தையைச் சொன்னால் உடனே இவரை ஓகோ, இவர் மெத்தப் படித்த மேதாவி போலிருக்கிறது இவர்தான் நமது கலாச்சாரத்தை கரைத்துக்குடித்தவர் என்றெல்லாம் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் தெளிவாக ஒன்றைச் சொல்லுங்கள்

இந்த கீதையைப் பற்றிப் பேசக்கூடிய யாராக இருந்தாலும், அதைப் பாராட்டிச் சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் முழுமையாக 700 சுலோகங்கள் இருக்கிறதே, இவை அத்தனையையும் படித்து முடித்தவர்களா என்று கேளுங்கள். நாணயமாக பதில் சொன்னால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள்.
அவர்கள் அதற்குப் பதிலாக எல்லாம் தெரிந்ததைப் போல சொல்லுவார்கள்.


No comments:

Post a Comment