Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்

பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்

விஷ்ணுவின் 22 அவதாரங்களில் வராக (பன்றி) அவதாரமும் ஒன்று. இந்தப் பன்றிக்குத் தனியே ஒரு புராணமும் உண்டு.அதில் ஒன்று பன்றிப் புராணம். பிரளய காலத்தில் இருட்டில் இருந்த உலகை பன்றிதான் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். புராணம் கூறுகிறது.

இந்தப் பன்றியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாம்.நாக்கு அக்னியைப் போன்றதாம்; அதாவது நெருப்பு. அதன் மயிர்கள் தர்ப்பைப் புல்களாம்.தலை பிரம்மாவாம். பன்றியின் இரண்டு கண்கள்தாம் இரவும் பகலுமாம். வராகத்தின் காதணிகள் ஆறு வேதங்கங்களாம். நாசித்துவா ரங்கள் நெய்யாம். பன்றியின் குரல் சாமவேதத்தின் துதிகள் போன்றதாம்.
வேத கோஷத்தைச் செக்காடும் இரைச்சல் என்றார் புரட்சிக் கவிஞர் புராணமோ பன்றியின் குரல் என்றே கூறிவிட்டது. பலே!

பன்றியின் உருவமே யாகம் போன்றதாம். சாமஸ்ருதிகள் போன்றவை அதன் குடல்களாம்.

அதன் ஆண் பெண் குறி இருக்கிறதே, அது நெய்யை ஆகுதி செய்வதற்குச் சமமாம்; அவ்வளவு புனிதம். யாக மந்த்ரங்கள் போன்றவையாம்
பன்றியின் எலும்புகள். சோமபானம் போன்றதாம்.

பன்றி ரத்தம். பன்றியின் உடலில் அடிக்கும் கப் (நாற்றம்) இருக்கிறதே, அது அவாளுக்கு யாக நைவேத்யத்தின் நறுமணமாம் (சகிக்கலை; யாக நாற்றம் பன்றி நாற்றம் போன்றதாம். பக்கத்தில் உட்கார்ந்து எப்படித்தான் யாகம் செய்கிறார்களோ?)
.
யாகத்தில் உச்சரிக்கப்படும் வேதங்கள் வராகத்தின் உதடுகளாம். வேதம் எவ்வளவு அழகியது என்பது புரிகிறதா?

இப்படிப் பலப்பல உறுப்புகள், அசைவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கிறது. வராக புராணம். - ARTICLE BY : சு. அறிவுக்கரசு.

viduthalai news 08/12/2007.
http://viduthalai.com/20071208/snews02.html.

 தொடர்புடைய இடுகை:- பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்


No comments:

Post a Comment