Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

அம்மண சாமியார்களின் கும்பமேளாவுக்கு 8 லட்சம் ஆணுறைகள்.



நாசிக்: கும்பமேளாவையொட்டி நாசிக்கில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாசிக், ஜூலை 10_ மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா என்ற அம்மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 14 இல் மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறையில் அளவை 60 விழுக்காடு குறைத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடை பெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நகரத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆகவே முன்னேற்பாடான இதர மாநிலங்கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டுகிறோம் என்று அனுப்பி இருந்தது. அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நகரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர். எல்லாவற்றையும்விட மகராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணுறைகளை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க அனுப்பியுள்ளது.

Reports of surge in condom supply annoys Kumbh Mela planners
.
SOURCE: http://indiatoday.intoday.in/story/condom-supply-surge-vexes-kumbh-planners-mela/1/450131.html
.

No comments:

Post a Comment